பட்ட பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 12 லட்சம் கொள்ளை..!!

பட்ட பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 12 லட்சம் கொள்ளை..!!

கட்டிட காண்ட்ராக்டர் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து பட்ட பகலில் 12 லட்சம் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகரின் வேட்டவலம் சாலையில் கட்டிட காண்ட்ராக்டர் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபரின் நானோ காரில் வைத்திருந்த ரூபாய் 12 லட்சம் பணத்தை பட்ட பகலில் மர்ம நபர் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை நகரில் உள்ள வேட்டவலம் சாலையின் ராமஜெயம் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ், இவரது மனைவி லட்சுமி தோல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.  அதுமட்டுமல்லாமல் சுரேஷ் கடந்த 30 வருடங்களாக கட்டிட காண்ட்ராக்டர் ஆகவும் தற்போது ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இன்று சுரேஷ் தனது நானோ காரில் வேட்டவலம் சாலையில் உள்ள வீடு ஒன்றை வாங்குவதற்காக சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு சென்றபோது மர்ம நபர் நோட்டமிட்டு காரில் வைத்திருந்த 12 லட்சம் பணத்தை கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளார்.  

அதன் பின்னர் காரை எடுக்க வந்த சுரேஷ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்ட பகலில் மக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து 12 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை நகர் பகுதியில் பெயரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:   கீழ்நமண்டியில் அகழாய்வு பணிகளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்...!!!