மீனவர்களை தாக்கிய கடல் கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு!

வேதாரண்யம்  மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக இலங்கை கடல் கொள்ளையர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வானவன்மகாதவி மீனவ கிராமத்தில் இருந்து சுப்பிரமணியன் மற்றும் செல்வம் என்பவர்களுக்கு சொந்தமான  2 பைபர் படகில் 9 பேர் கோடியக்கரை அருகே 10 கடல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது போது அதிவேக பைபர் படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் வானவன்மகாதவி மீனவர்கள் 9 பேரையும் கத்தி உள்ளிட்ட கடுமையான ஆயுதங்களை காட்டி மிரட்டி தாக்கி 750 கிலோ மீன்பிடிவலை, பேட்டரி, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட 3 லட்சம் மதிப்புடைய மீன்பிடி  பொருட்களை கொள்ளையடித்து கொண்டு விரட்டி அடித்துள்ளனர்.

காயம் அடைந்த 9 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார்  அடையாளம் தெரியாத இலங்கை கடல் கொள்ளையர்கள் 4 பேர் மீது வழிப்பறி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. 

இதையும் படிக்க: "தமிழ்நாட்டில் கள்ளுக்கடை புறக்கணிப்படுகிறது" அண்ணாமலை!!