உரிமையாளர் விஜயின் ஜேசிபியை திருடிய ஓட்டுநர் விஜய் கைது!

உரிமையாளர் விஜயின் ஜேசிபியை திருடிய ஓட்டுநர் விஜய் கைது!

காரைக்காலில் உரிமையாளரை ஏமாற்றி ஜேசிபி இயந்திரத்தை திருடிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான சூரக்குடி பகுதியை சேர்ந்தவர் விஜய். இவருக்கு சொந்தமாக ஒரு இயந்திரம் உள்ளது.  இவரது ஜேசிபி இயந்திரத்தை சீர்காழி பகுதியை சேர்ந்த ஓட்டுநர் விஜய் என்பவர் ஏமாற்றி எடுத்துச் சென்று விட்டதாக திருநள்ளாறு போலீசாருக்கு சூரக்குடி பகுதியைச் சேர்ந்த உரிமையாளர் விஜய் புகார் அளித்தார். 

புகாரை ஏற்ற திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்த ஒட்டுநர் விஜய் என்பவரை ஆய்வாளர் அறிவிச்செல்வன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் சீர்காழி சேர்ந்த ஒட்டுநர் விஜய் என்பவர் மன்னார்குடி பகுதியில் தலைமறைவாக உள்ளார் என்பது தெரியவந்ததை அடுத்து, அங்கு சென்று ஓட்டுநர் விஜயை கைது செய்தனர். விஜயிடம் நடத்திய விசாரணையில் இதில் தனது கூட்டாளியான முகமது பாருக் என்பவரும் உள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து முகமதுபாருக்கையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் ஏமாற்றி திருடிச் சென்ற 15 லட்சம் மதிப்பிலான ஜேசிபி இயந்திரத்தையும் திருநள்ளாறு போலீசார் கைப்பற்றினர். பின்னர் ஒட்டுநர் விஜய் மற்றும் முகமது பாரூக் இருவரையும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க:கோவை: கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த சுவர்; 4 பேர் உயிரிழப்பு!