அதிகரித்து வரும் போலி மருத்துவர்கள்... கைது எண்ணிக்கை அதிகரிப்பு!!

அதிகரித்து வரும் போலி மருத்துவர்கள்... கைது எண்ணிக்கை அதிகரிப்பு!!

கடந்த 10 நாட்களில் நடந்த சிறப்பு சோதனையில் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 72 போலி மருத்துவர்கள் கைது.  கிளினிக்குகள், சிறிய மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான போலி மருத்துவர்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்தில் போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்களை தொடர்ந்து காவல் துறையினரும், சுகாதார துறையினரும் இணைந்து தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.  இவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 15 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இரண்டாவதாக திருவாரூர் மாவட்டத்தில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதைப் போலவே புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் தலா 4 பேரும், பெரம்பலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலா 3 பேரும், தஞ்சாவூரில் 5 போலி மருத்துவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

ஓசூர் அருகே ஆங்கில மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த 3 போலி மருத்துவர்கள் உட்பட இதுவரை 72 போலி மருத்துவர்கள் தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க:  எதை எதை யாரிடமிருந்து கற்றுக் கொண்டேன் எனக் கூறிய உதயநிதி...!!!