தமிழகத்தையே கலக்கிய பிரபல கார் திருடன் கைது…  

சென்னை சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த  குருசாமி என்பவர் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அடையாறு எல்பி சாலையில் சாவியுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். 5 நிமிடம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது காரை காணவில்லை. இதுதொடர்பான புகாரில் அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.இதில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நாகர்கோவிலைச் சேர்ந்த ஏழுமலை என்பதும் என்பவர் கைவரிசை காட்டிய தெரியவந்தது.

தமிழகத்தையே கலக்கிய பிரபல கார் திருடன் கைது…   

இதையடுத்து சாஸ்திரிநகர் போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இணைந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் அவர் வாகனத்தை திருடிவிட்டு சென்னையை விட்டு எப்படி வெளியே சென்றார் என தெரியவில்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஒரு சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராவில் கூட இவர் திருடி சென்ற கார்  பதிவாகவில்லை. இந்த நிலையில் செல்போன் சிக்னலை வைத்து நாகர்கோவில் அருகே பதுங்கியிருந்த ஏழுமலையை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் செய்தித்தாள்களில் வரும் விளம்பரத்தைப் பார்த்து போலியான லைசென்ஸ்கள் போலியான ஆவணங்களைக் கொடுத்து டிரைவராகவும் வீட்டு காவலாளியாக வேலைக்கு சேர்ந்து அன்றைக்கு அன்றைய தினமே கார்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டவர் என தெரியவந்தது. 

சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் ரவி ,கண்ணன் மணிகண்டன், தனசேகர் சேகர் கார்த்திக் ,ராஜா பல பெயர்களில் இவர் மீது வழக்குகள  உள்ளன. போலீசாரிடம் சிக்கும் போது தான் ஒரு ஆதரவற்றவர. என்பதை கூறி விடுவாராம். இதையடுத்து ஏழுமலை கூறும் பெயரிலேயே அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு மாம்பலத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் காரை திருடி விட்டு சென்ற போது ஆம்பூரில் அந்த கார் விபத்தில் சிக்கியது. இதையடுத்து  காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார் ஏழுமலை என போலீசார் தெரிவித்தனர்

 தேனாம்பேட்டையில் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி மத்திய அமைச்சர் ஒருவரின் தூரத்து உறவினர் வீட்டில் வேலைக்கு சேர்ந்து அன்றைய தினமே அவரது வீட்டில் இருந்த காரை திருடிச் சென்றுள்ளார். கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்டம்பர் 22ம் தேதி செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்ந்து அன்றைக்கே அங்கிருந்த லோடு வேனையும் திருடிச் சென்றது தெரியவந்தது. மூன்று வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  

மேலும் அவரிடம் நடந்த விசாரணையில்  இவரது பெற்றோர் வைத்த பெயர் ஏழுமலை(29) சிறுவயதாக இருக்கும்போது இவரது பெற்றோர் சாலை விபத்தில் இறந்துள்ளனர். இதையடுத்து இவரையும் இவரது தங்கையையும் சமூக ஆர்வலர் ஒருவர் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்த்துள்ளார். அங்கே இருந்தபடியே பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு டூவீலர் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்துகொண்டு நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி பழகியுள்ளார். விதமான விதமான கார்களை வாங்கி ஓட்ட வேண்டும் . ஜாலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருவனந்தபுரத்திலிருந்து  9 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கிளம்பி வந்துள்ளார்.

சென்னையில் சுற்றி திரிந்த ஏழுமலை கடந்த 2012ஆம் ஆண்டு ஆதம்பாக்கத்தில் முதல் முறையாக ஒரு ஆட்டோவை திருடி விற்றுள்ளார். வாகனங்களை திருடும் போது அதிலிருக்கும் டிரைவர்கள் அல்லது உரிமையாளர்களின் லைசென்ஸ், ஆதார்கார்டு ஆகியவற்றில் உள்ள பெயர்களை தனது பெயர் எனக்கூறி டிரைவராகவும், செக்யூரிட்டி ஆகவும் வேலைக்கு சேர்ந்து அன்றைய தினமே அங்கிருக்கும் நான்கு சக்கர வாகனங்களை திருடி 20 ஆயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விற்றுவிட்டு மது, கஞ்சா அடிப்பாராம்.

சென்னையில் அம்பத்தூர் வில்லிவாக்கம் கோயம்பேடு நங்கநல்லூர் நீலாங்கரை என இவர் கைவரிசை காட்டிய இடங்கள் நீள்கிறது.கடந்த 2018 ஆம் ஆண்டு பூந்தமல்லி போலீசார் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை நகரில்ல உணவகங்கள் வடபழனி சேர்ந்த பிரபல தொழிலதிபர்  வாசுதேவன் என்பவர் வீட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு வேலைக்கு சேர்ந்து அன்றைய தினமே காரை திருடிவிட்டு பாண்டிச்சேரி சென்று மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த போது  போலீசார் இவரை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.

 சென்னை மட்டுமின்றி திருவள்ளூர் செங்கல்பட்டு கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளன.கார்களை திருடிச் செல்லும்போது சுங்கச்சாவடிகள் வழியாக செல்லவே மாட்டாராம். காரை திருடி விற்று ஜாலியாக செலவு செய்தபின் கையில் காசு கரைந்ததும் மீண்டும் திருட தொடங்குவார் என்கின்றனர் போலீசார்.