சம்பளம் கேட்கப் போய் காரை அபேஸ் செய்த முன்னாள் ஓட்டுநர்... 12 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசார்...

சென்னை ராயப்பேட்டை பகுதியில் சம்பள பாக்கியை கேட்க சென்ற இடத்தில் வீட்டின் உள்ளே சென்ற முன்னாள் கார் ஓட்டுனர் காரை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பளம் கேட்கப் போய் காரை அபேஸ் செய்த முன்னாள் ஓட்டுநர்... 12 மணி நேரத்திற்குள் மீட்ட போலீசார்...

சென்னை மயிலாப்பூர் பகுதிக்குட்பட்ட ராதாகிருஷ்ணன் சாலை 6-வது தெருவில் வசிப்பவர் தாரிக் அக்தர்(26) இவர் பிராட்வே பகுதியில் துணிக்கடை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை இவர் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா கார் காணவில்லை என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டபோது கார்  திருடப்பட்டது. இருப்பது தெரியவந்தது காரின் ஜிபிஆர்எஸ் ஆய்வு மேற்கொண்ட போது சென்னையை அடுத்த போரூர் காட்டுப்பாக்கம் பகுதியில் கார் இருப்பது தெரியவந்ததை அடுத்து ஆய்வாளர் தலைமையிலான போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்ததில் காட்டுப்பாக்கம் பகுதியில் காரின் உள்ளே நபர் ஒருவர் தூங்கி இருப்பது கொண்டு உடனடியாக அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணையில் தாரிக்கின் தந்தை அஷ்ரப் அலியிடம் ஓட்டுனராக பணிபுரிந்த ஜாபர் சாதிக்  என்பதும்  காரை திருடி சென்றதும் தெரிய வந்தது. விசாரணையில் அப்போது ஆட்டோ ஓட்டுனராக பிழைப்பு நடத்தி வரும் இவர் பணம் தேவைக்காக தாரிக் வீட்டிற்கு சென்று சம்பள பாக்கி 3 ஆயிரம் ரூபாய் வாங்குவதற்காக  சென்றதாகவும் அங்கு யாரும் இல்லாததால் எப்போதும் போல உள்ளே சென்று காரின் சாவியை எடுத்து காரை எடுத்துச் சென்றதாக ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த ராயப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருடி சென்ற காரை 12 மணி நேரத்திற்குள் கைப்பற்றிய ராயப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.