எலக்ட்ரிக் மோட்டாரில் கடத்தி வரப்பட்ட தங்கம்....!!

எலக்ட்ரிக் மோட்டாரில் கடத்தி வரப்பட்ட தங்கம்....!!

அபுதாபியில் இருந்து சென்னைக்கு எலக்ட்ரிக் மோட்டாரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ. 95 லட்சத்தி 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 796 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரகசிய தகவல்:

சென்னை , பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். 

தீவிர கண்காணிப்பு:

அப்போது அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை கண்காணித்தனர்.  அப்போது சென்னையை சேர்ந்த  30 வயது வாலிபர் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்.  அவர் முன்னுகு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்த போது எதுவும் இல்லை.  தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போதும் எதுவும் இல்லை. 

சோதனை:

மீண்டும் உடைமைகளை சோதனை செய்த போது எலக்ட்ரிக் மோட்டார் இருந்தது.  இந்த மோட்டார் வழக்கத்துக்கு மாறாக சற்று கனமாக இருந்தது.  இதையடுத்து எலக்ட்ரிக் மோட்டாரை உடைத்து பார்த்த போது அதில் உருளை போல் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.

பறிமுதல்:

இதில் இருந்து ரூ. 95 லட்சத்தி 15 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 796 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து கடத்தலில் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என  விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிக்க:   பால்வளத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்ட புதிய 48 அறிவிப்புகள்...!!!