குஜராத் வழக்கு... 26 பேர் விடுதலை..

குஜராத் வழக்கு... 26 பேர் விடுதலை..

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம் சுமத்தப்பட்ட 20 நபர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கலவரம் மூண்டது. இதில் கலோல் நகரில் நடந்த கலவரத்தில்  இஸ்லாமியர்கள் 11 பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். மேலும் ஒரு இஸ்லாமிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக 39 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. 20 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் குற்றம் சுமத்தப்பட்ட 13 பேர் விசாரணையின்போதே உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 26 நபர்களையும்  ஹலோல் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. சாட்சிகளின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் உள்ளதால் குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுதலை செய்வதாக தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

குஜராத் கலவரம் தொடர்பாக அப்போதைய குஜராத் மாநில முதலமைச்சரும் தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக அண்மையில் பிபிசி வெளிட்ட ஆவணப்படதில் குற்றம் சுமத்தியது. மேலும் இந்த ஆவணப்படம் மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.