இந்தியா - இங்கிலாந்து: 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி...!

உலகக்கோப்பை கிாிக்கெட் தொடாில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லக்னோவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்துடன் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனா். 

இதனால் இந்தியா 40 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்த போதிலும், மறுபக்கம் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 229 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணி வீரா்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் எதிரணி வீரா்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனா். முடிவில் 34 புள்ளி 5 ஓவர்களில், இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.