“வாடகை தாய்கள் குறித்து வந்த தகவல் பொய்”- அதிகாரிகள்...

பிரசாந்த் மருத்துவமனையின் நோயாளிகள் 15க்கும் மேற்பட்டோர் ஒரே வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் பெறப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“வாடகை தாய்கள் குறித்து வந்த தகவல் பொய்”- அதிகாரிகள்...

சென்னை: நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள சிஎப்சி கருத்தரிப்பு மையத்தின் மூலம் வாடகை தாய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளியான தகவலையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளான இணை இயக்குனர்கள் 3 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டனர்.

முதலில் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள சிஎப்சி மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விளக்கம் பெறப்பட்டது. பின்னர் அந்த மருத்துவமனைக்கு எதிரில் உள்ள தெருவில் 15க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் ஒரே வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நேரிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் படிக்க | என்னது நயன்தாரா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லையா? சூடு பறக்கும் வாடகைத் தாய் விவகாரம்..!

அந்த கர்பினிகளிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது அவர்கள் பிரசாந்த் மருத்துவமனையின் நோயாலிகள் என தெரிவித்தனர். பின் அவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருவதற்கான ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அனைவரும் வெளிநாட்டினராக இருப்பதால் விசா உள்ளிட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அதன் பின் அவர்கள் வாடகை தாய் தான் என உறுதி செய்யப்பட்டது. ஆனால் கூடுதல் விவரங்களை பிரசாந்த் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே போல, அருகில் உள்ள சிஎப்சியின் நோயாளிகள் தங்கியுள்ள விடுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு 10 பேர் தங்கியுள்ளனர். அனைவருமே கணவன் மனைவி சேர்ந்து தான் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | திருமணமாகாத வட மாநில பெண்கள் வாடகை தாயா...? பரபரப்பு சம்பவம்...!

மேலும், அவர்கள் யாரும் வாடகை தாய் சிகிச்சையில் இல்லை, ஐவிஎப் எனப்படும் செயற்கை கருத்திரிப்பு சிகிச்சைக்காக மட்டுமே உள்ளனர் என ஆதாரபூர்வமாக அதிகாரிகளிடம் தெரிவித்ததாக இணை இயக்குனர்கள் தெரிவித்தனர். அவர்கள் மருத்துவ விசா பெற்றே இங்கு சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி, அருகில் உள்ள வீட்டிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதை தகவலரிந்ததும் அங்குத் ஆய்வு செய்தனர். அவர்கள் வங்காளதேச நாட்டினில் இருந்து சென்னை வந்து சிஎப்சி மருத்துவமனையில் ஐவிஎப் சிகிச்சை மூலம் கருத்தரித்து ரெயின்கோ மருத்துவமனையில் குழந்தை பெற்று சில நாட்களே ஆகிறது. அதனால் வீட்டில் வாடககைக்கு இருப்பதாகவும் அதற்கான ஆவணங்களையும் தெரியபடுத்தினர். 

அதிகாரிகள் விசாரணை முடித்து செல்லும் பொழுது, விசாரணை தொடர்ந்து நடைபெறும். அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்து சென்றனர்.

மேலும் படிக்க | இளமையாக இருக்க நரமாமிசம்... 56 துண்டுகளாக வெட்டிய பயங்கரம்...

தொடர்ந்து பேசிய சிஎஃப்சி மருத்துவமனையின் தலைவர் தாமஸ், அதிகாரிகள் தங்களிடம் விசாரணை மேற்கொண்டனர், அப்பொழுது, சிஎப்சி மருத்துவமனையின் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகள் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அங்கு வாடகை தாய் சிகிச்சையில் இல்லை எனவும், ஐவிஎப் சிகிச்சையில் மட்டுமே இருந்து வருகின்றனர்.

அங்கு கனவன் மனைவி என இருவரும் இணைந்தே இருக்கின்றனர். இதில் எவ்வித சட்ட விதி மீறல்களும் நடைபெறவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டனர். ஆதாரம் இல்லாமல் சிஎப்சி மருத்துவமனையின் பெயரை பயன்படுத்தியது வருத்தமளிக்கிறது.

மேலும் படிக்க | 5 குழந்தை தொழிலாளிகள் அதிரடியாக மீட்பு...

இதனால் மக்களும் சிகிச்சை பெறும் நோயாளிகளிடமும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதனால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த செய்தியை வெளியிடாமல் இருப்பதற்கு 10லட்சம் ரூபாய் பேரம் பேசினர் எனவும் தெரிவித்தனர்.

அத்துமீறி மருத்துவமனையை படம்பிடித்தது, நோயாளிகளை துண்புறுத்தும் வகையில் இருப்பதாகவும், அனுமதி இன்றி நோயாளிகளை படம் பிடித்தது, இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர், முதலமைச்சருக்கும் புகார் அளிக்கப்படும். மேலும் மானநட்ட வழக்கு தொடரப்படும் எனவும், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் மருத்துவமனையின் தலைவர் தாமஸ் தெரிவித்தார்.

மேலும் படிக்க | நயன்- விக்கி ஜோடியின் குழந்தை விவகாரம்; இன்னும் நீங்க அத விடலையா? - செய்தியாளர்களிடம் கேட்ட அமைச்சர்!