உதவி ஆய்வாளரின் மூக்கை உடைத்தது சிறுவர்களா...?

உதவி ஆய்வாளரின் மூக்கை உடைத்தது சிறுவர்களா...?

சென்னை தண்டையாா்பேட்டையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய 5 சிறுவா்களை பிடித்து விசாாித்து வருகின்றனா். 


சென்னை ஆர் கே நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பாலமுருகன். இவர் நேற்றைய தினம் சாதாரண உடையில் தனது 'TN.01.G.6332' இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்தில் ரோந்து பணியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கே சந்தேகம் படும்படியாக நின்றிருந்த 5 நபர்களை விசாரணை செய்து கொண்டிருந்ததில் ஒரு நபர் கஞ்சா போதையிலும், மற்றவர்கள் குடிபோதையிலும் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் திடீரென உதவி ஆய்வாளர் பாலமுருகனை ஒருமையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

உடனே அந்த நபரின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்து வைத்துக் கொண்டு அவரை உதவி ஆய்வாளர் கீழே உட்கார வைத்திருந்ததார். பின்பு கீழே உட்கார்ந்து இருந்த நபர் திடீரென எழுந்து உதவி ஆய்வாளர் முகத்தில் சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த  மற்றவர்களும் சேர்ந்து உதவி ஆய்வாளரை சரமாரியாக அடித்து துவம்சம் செய்து விட்டு அங்கு இருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிக்க : இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி!

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், உதவி ஆய்வாளரை மீட்டு அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்தவர்கள், பாலமுருகனின் முகம், கை, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனர். 

தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக ஆர்கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளரை தாக்கிய மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வந்தனர். 

இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தண்டையார்பேட்டை உதவி ஆய்வாளர் பாலமுருகனை தாக்கிய வழக்கில் விசாரணை நடத்திய போலீசாா், 5 பேர் கொண்ட சிறுவா்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.