சனி பகவான் கோயில் அர்ச்சகரை... தேடி வந்த சனி...!!

சனி பகவான் கோயில் அர்ச்சகரை... தேடி வந்த சனி...!!

திருநள்ளாற்றில் பரிகாரத்திற்காக வந்ததாக கூறி அர்ச்சகர் வீட்டில் தங்கி இரவோடு இரவாக பணம் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளது நூதன மோசடி கும்பல்.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பெருமாள் கோவில் சன்னதி தெருவில் வசிப்பவர் ரோகினி (இவர் ஒரு ஆண்). இவர், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் கடந்த 40 ஆண்டுகளாக அர்ச்சகராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்க்ளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ளனர். இதனால், ரோகினியும், ராஜேஸ்வரியும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். 

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  மாலை நேரத்தில், முக அடையாளம் தெரிந்த, அதே சமயம் முகவரி தெரியாத 50 வயது பெண் ஒருவர், ஆண் அர்ச்சகரான ரோகினியை மாமா என செல்லமாக அழைத்துள்ளார். அப்போது 30 வயது வாலிபர் ஒருவரை இது எனது மகன் வெங்கடேஷ்(30) அறிமுகம் செய்த அவர் கடந்த முறை தனக்கு சனீஸ்வரரை சிறப்பாக சாமி தரிசனம் செய்து வைத்தீர்கள் என்றும் இதனால் தனது மகளுக்கு நல்லபடியாக திருமணம் ஆனது என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து ஆண் அர்ச்சகரான ரோகினி மாமாவிடம் பேசிய அவர் இந்தமுறை தனது மகனுக்கு சாமி தரிசனம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார். 

இதைக் கேட்ட ஆண் அர்ச்சகரான ரோகினி அவர்களை அன்றிரவு திருநள்ளாறிலேயே தங்க சொல்லியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் இருவரும், தங்களுக்கு வெளி இடங்களில் தங்கி பழக்கம் இல்லை எனக்கூறியுள்ளனர். அதனால், அர்ச்சகர் வீட்டில் கிடைக்கும் பெஞ்சில் படுத்துகொள்வதாக கூறியுள்ளனர். இதைக் கேட்ட ஆண் அர்ச்சகரான ரோகினியும் சரி எனக் கூறியுள்ளார். 

பின்னர், மர்ம நபர்கள் இருவரும் ''இரவு உணவை நல்ல ஓட்டலில் வாங்கி வருகிறோம். அனைவரும் உண்போம்'' என கூறி, ஓட்டலில் உணவை வாங்கி கொடுத்துள்ளனர். உணவில் மயக்கம் மருந்து கலந்து இருப்பதை உணராத அர்ச்சகரும் அவரது மனைவியும் அந்த உணவை சாப்பிட்டு நன்றாக தூங்கியுள்ளனர். 

அப்போது இரவோடு இரவாக, மர்ம நபர்கள் இருவரும், ரோகினி வீட்டு பீரோவை உடைத்து, அதில் இருந்த சுமார் 8 லட்சம் மதிப்பிலான பல்வேறு தங்க நகைகளையும், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கத்தையும், சில வெள்ளிப்பொருட்களையும், செலவுக்காக பெல்ட்டில் வைத்திருந்த பணம் ரூபாய் 600-ஐயும் திருடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

தூக்கம் கலைந்து விடியற்காலையில் எழுந்த தம்பதியினர், மர்ம நபர்களை தேடியபோது இருவரும் இல்லை. தொடர்ந்து, வீட்டு பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பீரோவை திறந்துபார்த்தபோது, மேற்கண்ட, தங்க நகைகள், பணம், வெள்ளிபொருட்கள் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. அப்போதுதான் வந்தது சனிபகவானை தரிசிக்க வந்த பக்தர்கள் அல்ல தன்னை பிடிக்க வந் சனியன்கள் என அர்ச்சகருக்கு உரைத்துள்ளது. 

பின்னர் இது குறித்து தனது மகள்களை வரவழைத்து கலந்தாலோசித்து,  திருநள்ளாறு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார் ஆண் அர்ச்சகரான ரோகினி.