3 கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கம்.. எந்த கோடி தெரியுமா?

தமிழகத்தில் தொடர் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 குற்றவாளிகளின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்குச் சொந்தமான ஐந்தரை கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.

3 கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கம்.. எந்த கோடி தெரியுமா?

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் கொடுங்குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக அக்குற்றவாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஒரு குடும்பத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியுள்ளது.

மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் குடியிருப்பு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 11.11.2021-ம் தேதி ஒத்தக்கடை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, சட்டத்திற்குப் புறம்பாக 170 கிலோ கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த காளை, பெருமாயி, அய்யர் ஆகிய 3 நபர்களை கைது செய்து அவர்கள் மீது ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கஞ்சா விற்கும் தொழில் செய்து அதில் ஈட்டிய பணத்தையும், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளையும் அவரது உறவினர்கள் பெயரில் ஈட்டிய சொத்துக்களையும் பறிமுதல் செய்யப்படும்.

இந்நிலையில், கஞ்சா வியாபாரிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரங்களை சேகரித்து அனைத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். C. சைலேந்திர பாபு, இ.கா.ய அறிவுறுத்தலின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்படி மூன்று பேர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வாகனங்கள், வங்கி கணக்குகளில் உள்ள இருப்பு தொகை மற்றும் வரவு செலவு ஆகியவற்றை பற்றி விரிவாக கணக்குகள் எடுக்கப்பட்டும் நிதி விசாரணை செய்தும், சுமார் 5% கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்த நடவடிக்கை தொடரும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.