கோவிலில் புனித நூலை அவமதித்ததாக ஒருவர் அடித்து கொலை..

அமிர்தரஸில் புனித நூலை அவமதித்து வந்ததாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலில் புனித நூலை அவமதித்ததாக ஒருவர் அடித்து கொலை..

பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்க்கியர்கள் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் வைக்கப்பட்டிருந்த பிரத்யேக இடத்தில் இளைஞர் ஒருவர்  புனித நூலை அவமதித்ததாக கூறுகின்றனர்.இதையடுத்து அங்கு பணியில் இருந்த SGPC ஊழியர்கள் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை அடித்து கொன்றுள்ளனர்.

இறந்தவரின் வயது சுமார் 30 ஆக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அவரது அடையாளம் கண்டறியும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவலில் தெரியவந்துள்ளது. அதாவது அந்நபர் எப்பொழுது கோவிலுக்குள் நுழைந்தார்,அவருடன் எத்தனை பேர் இருந்தனர் என்பது பற்றிய கேள்விகள் குறித்து சிசிடிவி கேமராக்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சட்டம் ஒழுங்கை பராமரிக்க எஸ்ஜிபிசி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதற்கிடையே சீக்கிய பக்தர்களும்,பல்வேறு சீக்கிய அமைப்புகளும் இதனை விமர்சித்து வருகின்றனர்.

சீக்கியர்களின் புனித நூலை அனைத்து மதத்தினரும் வழிபடலாம் என முன்னாள் எஸ்ஜிபிசி தலைவர் கூறியுள்ளார்.மேலும் அவர் பல சதித்திட்டம் மேற்கொள்ள முயற்சிகள் நடப்பதாகவும் இந்த சதியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய வேண்டும் என தெரிவித்தார்.படுகொலை சம்பவத்தை பற்றி கவலையையும் தெரிவித்தார்.அரசாங்கத்திடம் இதனை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பாஜக தலைவர் ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி பாஜகாவின் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அஸ்வினி சர்மா பஞ்சாப் அரசை குறை கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த காங்கிரஸ் அரசு மீண்டும் தவறிவிட்டதாக கூறினார்.மேலும் அவர் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் குற்றம் சாட்ட பட்டிருப்போர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்போர்களையும் கண்டு ப்டிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.