லஞ்சம் வாங்கியதாக மேயரின் உதவியாளர் கைது...!!

லஞ்சம் வாங்கியதாக மேயரின் உதவியாளர் கைது...!!

கடலூர் மாநகராட்சியில் லஞ்சம் வாங்கியதாக மேயரின் நேர்முக உதவியாளர் ரகோத்தமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரணி என்பவரிடம் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்காக ரூ. 20,000 லஞ்சம் பெற்றபோது கடலூர் நகராட்சி மேயரின் உதவியாளர் ரகோத்தமன் கைது செய்யப் பட்டுள்ளார். ரகோத்தமனுடன் இணைந்து கட்டுமான வரைபட அனுமதி வழங்கும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ஆறுமுகம் என்பவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி மாநகராட்சி அலுவலகம் மற்றும் கட்டிட வரைபட  அனுமதி வழங்கும் தனியார் நிறுவனங்கள் என ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய நிலையில் ஒரு மாதத்தில் மேயர் நேர்முக உதவியாளர் மற்றும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.