அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு; குற்ற பத்திரிகை தாக்கல்!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப் பிரிவு போலீசார் தரப் பில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டார் என புகார் அளிக்கப்பட்டு அப்போது மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை  உச்சநீதிமன்றம் விசாரித்தது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக போக்குவரத்துத் துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக முழுமையாக தொடக்கத்தில் இருந்து விசாரணை நடத்த வேண்டும். தேவையெனில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய குற்றப் பிரிவு போலீசாருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டம் உட்பட மூன்று வழக்குகள் மத்திய குற்றப் பிரிவு போலீசார் சார் பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மூன்று வழக்குகளுக்கு உண்டான குற்றப்பத்திரிகையை உச்சநீதிமன்ற உத்தரவுபடி மத்திய குற்றப் பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம். பி., எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 5000க்கும் மேற்பட்ட பங்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

மூன்று வழக்குகளின்  குற்றப்பத்திரிகையிலும் செந்தில்பாலாஜியின்  பெயர் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் அமலாக்க துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப் பிடத்தக்கது.

இதையும் படிக்க: முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக மாசெ கூட்டம்!