சூறாவளி போல போகிற... குறுக்க இந்த கௌசிக் வந்தா??

சூறாவளி போல போகிற... குறுக்க இந்த கௌசிக் வந்தா??

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய கல்லூரி மாணவனின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் சாலையில் செல்லும் போது ரீல்ஸ் எடுப்பதற்காக தங்களின் உயிர்களை பணயம் வைத்து ரிஸ்க்  எடுத்து வருகின்றனர். சினிமாக்களில் வருகின்ற மோட்டார் சைக்கிள் சாகச காட்சியை போன்று சாலைகளில் போக்குவரத்து இடையூறாக ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுப்படும் நபர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வந்தாலும், அதையும் மீறி சாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசங்களில் ஈடுப்பட்டு தான் வருகின்றனர்.

அந்த வரிசையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாணவன் ஒருவர் நாகர்கோவில் சாலையில் விலை உயர்ந்த  மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அந்த  வீடியோ காட்சியானது சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால் பலர் ஆபத்தான இந்த சாகசம் பயணம்   குறித்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளனர்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் அந்த இளைஞர் யார் எந்த ஊர் என்று விசாரித்தபொழுது, அவர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் விஷ்ணு என்பது தெரியவந்தது. பின்னர் அந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை  போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும்  போக்குவரத்து விதிகளை மீறியதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாகவும் ரூபாய் 13 ஆயிரத்தை அபராதமாக விதித்துள்ளனர்.

இதையும் படிக்க || 8 வருடமாக 144 தடை உத்தரவில் இருந்த கிராமம்... நடந்தது என்ன?