பூசாரி உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம்...

கொலை செய்யப்பட்ட கோயில் பூசாாி உடலை வாங்க மறுத்து உறவினா்கள் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பூசாரி உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக போராட்டம்...

திருநெல்வேலி | மேலச்செவல் பழைய கிராமம் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டு சாமி. இவர் அப்பகுதியில் உள்ள நவநீத கிருஷ்ணன் சுவாமி கோவிலில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் அன்று  இரவு கோவில் வளாகத்தில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு உடலை கைப்பற்றியதோடு  வழக்குப்பதிவு செய்து வந்தனர். இதில் தொடர்புடைய மேலச்செவலை சேர்ந்த கொம்பையா, செல்லக்குட்டி, பாலச்சந்த அருண், இசக்கிப்பாண்டி, மாரியப்பன், பற்பநாதன், ஐயப்பன் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

மேலும் படிக்க | ரகசிய தகவலும்....கடத்தி வரப்பட்ட தங்கமும்....

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவில் வளாகத்தில் மது அருந்தியதை தட்டி கேட்டதால் கிருஷ்ணன் என்ற கிட்டுவை மது போதையிலும்  ஆத்திரத்திலும்  கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.  

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கிருஷ்ணன் என்ற கிட்டுவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | காணும் பொங்கலில் சோக சம்பவம்.. திருப்பத்தூரில் வாலிபர் உயிரிழப்பு..!

இச்சம்பவம் தொடர்பாக மேலச்செவலில் பகுதி முழுவதும், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஊருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

இதனிடையே  இச்சம்பவத்தில் தொடர்புடைய  ஐயப்பன் போலீஸ் காவலில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது அவர்  வழுக்கி விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டு காலில் மாவு கட்டு போடப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க | உணவகத்தில் லாவகமாக நுழைந்து திருடும் திருடனின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு