வடமாநில பயணிகளை டார்கட் செய்த இளைஞர்கள்...! தொடர்ந்து கைவரிசை...!!

வடமாநில பயணிகளை டார்கட் செய்த இளைஞர்கள்...! தொடர்ந்து கைவரிசை...!!

திருப்பூரில் ரயில் பயணிகளை குறி வைத்து மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளையடித்த வடமாநில கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

வடமாநில கும்பல் கைது:

அண்மைக் காலமாகவே திருப்பூர் ரயில் நிலையம் வரும் வடமாநில ரயில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து அவர்களின் உடைமைகள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ரயில்வே காவல்துறையினர், ரயில் நிலையம் மற்றும் அதன் அருகில் இருக்கும் பேக்கிரிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதியில் செல்போன் எண்களின் இயக்கங்களையும் சைபர் செல் உதவியுடன் கண்காணித்தனர்.

இதையும் படிக்க: என்னது... ஓபிஎஸ் அணியில் இணைகிறேனா? கொந்தளித்த பிரபலம்...!

அதன் அடிப்படையில், திருப்பூரில் பனியன்  நிறுவனத்தில்  பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சல்மான், மன்வார் ஆலம், ஆகிய 5 பேரை கைது செய்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் ஐவரும்  ரயில் நிலையம் மற்றும் காதர் பேட்டை பகுதிக்கு வரும் வட மாநிலத்தவரை குறி வைத்து மயக்க பிஸ்கட் கொடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.  

இவர்கள் பீகாரில் இருந்து  வரும்போதே தூக்க மாத்திரைகளை வாங்கி வந்து திருட்டில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 30 செல்போன்கள், 10 ஆயிரம் ரொக்கம், மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டுகள், மயக்க மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.