ரூ.10 லட்சம் மற்றும் 10 சவரன் நகைகள் திருட்டு...

வீட்டின் பூட்டை உடைத்து 10 லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.10 லட்சம் மற்றும் 10 சவரன் நகைகள் திருட்டு...

திண்டுக்கல் | பழனி அருகே நேதாஜி நகரில் வசித்து வருபவர் விவசாயி செல்வராஜ் என்பவர் நேற்று இரவு கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தபோது இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து சென்ற திருடர்கள், பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அருகில் இருந்தவர்கள் பழனி நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி நகர போலீசார் கைரேகை மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர்.

நேதாஜி நகர் பகுதியில் நேற்று இரவு மட்டும் பலமுறை மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. பழனி நகர் பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து வீடுகளில் பூட்டுகளை உடைக்கப்பட்டு திருடப்பட்டு வரும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க | கோயில் கோபுர கலசம் திருட்டு - போலீசார் விசாரணை...