மதுவிலக்கு துறை அமைச்சர் தொகுதியில் களை கட்டும் மது விற்பனை...

மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொந்த தொகுதியிலேயே, திருவள்ளுவர் தினத்திலும் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.

மதுவிலக்கு துறை அமைச்சர் தொகுதியில் களை கட்டும் மது விற்பனை...

திருவள்ளுவர் தினமான இன்று தமிழகத்தில் அனைத்து மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று டாஸ்மார்க் கடை விடுமுறை என்பதால் மது பிரியர்கள் மதுபான பார்க்கு சென்ற மது பாட்டிலை வாங்கி வருகின்றனர்.

திருவள்ளுவர் தினமான இன்று மதுபான கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் மதுபான பிரியர்களின் அனைத்து வகை அதுவும் மிக சுலபமாக கிடைக்கும் வகையில் மதுபான பாரில் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | விடுமுறை அறிவிப்பால் மது வாங்க முந்தியடித்த மது பிரியர்கள்...

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான கூடம்,ராயனூர் தாந்தோன்றி மலை வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

மதுவிலக்கு துறை அமைச்சர் சொந்த மாவட்டத்தில் மது கூடங்களில் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருவது பொது மக்களுக்கு இடையே வேதனை அளிக்கிறது. 

மேலும் படிக்க | அ.தி.மு.க. வினரை தமிழ்நாட்டு மக்கள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் - காங்கிரஸ்

கள்ளத்தனமாக விற்கப்படும் மதுபானங்களை வாங்கிச் செல்லும் நபர்கள் குறித்த வீடியோவும் உள்ளது. 130 ரூபாய்க்கு விற்கப்படும் மதுபானம் 200 ரூபாய் முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்

திருவள்ளுவர் தினமான இன்று மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டிருந்தாலும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொந்த தொகுதியில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா? கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | மதுபோதை பயணியை தாக்கிய நடத்துனரின் வீடியோ வைரல்...