காரில் கொண்டு வந்த 1 டன் குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்  

திண்டுக்கல் அருகே காட்டு பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1 டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒருவர் கைது, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

காரில் கொண்டு வந்த 1 டன் குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்   

திண்டுக்கல் அருகே காட்டு பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1 டன் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒருவர் கைது, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் - மதுரை 4 வழி சாலையில் இன்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது அதில் 10 மூடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பான்மசாலா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் காரை ஓட்டிவந்த பள்ளப்பட்டியை சேர்ந்த ஞானசேகரன் (வயது 30) என்பவரை கைது செய்த போலீசார். அவரிடம் விசாரனை நடத்தினர்.

விசாரனையில்  சின்னாளபட்டி  அருகே உள்ள சிறு நாயக்கன்பட்டி அருகே உள்ள காட்டுப் பகுதியில் பேகம்பூரை சேர்ந்த முகமது ஜக்கிரியா என்பருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்ட குடோனில் இருந்து எடுத்து  வருவதாக  தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் சிறுநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு சென்று அங்கு தனியாக இருந்த ஒரு குடோனை ஆய்வு செய்தனர்.  அதில் 33  மூடைகளில் புகையிலை பொருட்களும், பான் மசாலாக்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு குடோனில் யாரும் இல்லாததால் புகையிலை பொருட்களை மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த அம்பாத்துரை போலீசார் ஞான சேகரனை கைது செய்தனர். புகையிலை பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் கூறுகையில் குடோனில் பதுக்கி வைத்து  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. பிடிப்பட்ட 53 மூடைகளில் இருந்த 1 டன் புகையிலை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் என  தெரிவித்தனர்.