பாலியல் உணர்வை தூண்டும் மருந்தை கொடுத்து சிறுமியை சீரழித்து வன்கொடுமை:  அதிக ரத்தபோக்கால் உயிரிழந்த கொடூரம்...

சிறுமிக்கு பாலுணர்வை ஏற்படுத்தும் மருந்தை கொடுத்து 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை ஆளானதால் அதிக ரத்தபோக்கால் சிறுமி உயிரிழந்த கொடூர சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் உணர்வை தூண்டும் மருந்தை கொடுத்து  சிறுமியை சீரழித்து வன்கொடுமை:  அதிக ரத்தபோக்கால் உயிரிழந்த கொடூரம்...

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் உள்ள ராஜேந்திரகிராம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் பல்வேறு தாவரங்கள், உணவுகள் மற்றும் சில இரசாயனங்களிலிருந்து பொருட்களில் பாலியல் உணர்வை தூண்டும் மருந்தை  தயாரித்து சிறுமிக்கு கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தச்சம்பவம் குறித்து பேசிய ராஜேந்திரகிராம் காவல் நிலையத்தின் மூத்த காவல்துறை அதிகாரி நரேந்திர பால் சனிக்கிழமையன்று 17 வயது இளம்பெண் மரணம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கைய்யில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அந்தரங்க பகுதியில் இருந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது.

குற்றம் செய்வதற்கு முன், சிறுமிக்கு 20-22 வயதுடைய குற்றம் சாட்டப்பட்டவர்களால் சில பாலுணர்வு மருந்தை கொடுத்துள்ளனர். இதனையடுத்து அவரது வீட்டிற்கு திரும்பியபோது பாதிக்கப்பட்ட பெண் கடுமையான வலியில் துடித்துள்ளார். மேலும் தனக்கு நடந்த கொடுமைகளை இறப்பதற்கு முன்   குடும்பத்தில் உள்ள ஒரு பெண் உறுப்பினரிடம்  கூறியுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி நரேந்திர பால் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (கற்பழிப்புக்கான தண்டனை), 363, 366 (கடத்தல்) மற்றும் 304 (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதில் போலீசார் அலட்சியம் காட்டுவதாகக் கூறி ராஜேந்திரகிராம் காவல் நிலையத்தில் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.