2வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவன் மாயம்: கடிதம் எழுதிவைத்து விட்டு சென்றதாக தகவல்

கோவையில், நீட் தேர்வு தோல்வி பயத்தில், மாணவர் ஒருவர் வீட்டை விட்டு மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவன் மாயம்: கடிதம் எழுதிவைத்து விட்டு சென்றதாக தகவல்

கோவையில், நீட் தேர்வு தோல்வி பயத்தில், மாணவர் ஒருவர் வீட்டை விட்டு மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், கெந்தரையை சேர்ந்த மதன் என்பவரின் மகன் விக்னேஷ். 19 வயதான இவர், பெரியநாயக்கன்பாளையம் விஜயலட்சுமி நகரில் ,தாய் அம்பிகாவதியுடன் வீடு எடுத்து தங்கி, நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். கடந்தாண்டு விக்‌னேஷ் நீட் தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து, அவர் தனியார் பயிற்சி மையம் மூலம், தேர்வுக்கான பயிற்சி பெற்று அண்மையில் நீட் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. ஆனால் தேர்வு எழுதிய பின்னர் அவர் சோகமாகவே காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டிலிருந்த அவர், திடீரென மாயமானார்.  வெகுநேரமாகியும் மகனை காணாததால், அவரை தேடிய அம்பிகாபதி,  அறைக்கு சென்று பார்த்தபோது, படுக்கையில் கடிதம் இருப்பது கண்டு அதிர்ச்சியுற்றுள்ளார். அதில்  பெற்றோர் எதிர்பார்த்ததை தன்னால் கொடுக்க முடியவில்லை என்றும், நீட் தேர்வில் தோல்வி தான் என்பதை கூற பயமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும்  வீட்டில் தொடர்ந்து இருக்க தனக்கு தகுதி இல்லை எனவும், வீட்டை விட்டு செல்ல முடிவு செய்துள்ளதாகவும், தன்னை  தேட வேண்டாம் எனவும்   எழுதியுள்ளார். இதுகுறித்து தாய் அளித்த புகாரின் பேரில் , போலீசார் வழக்கு பதிந்து மாணவரை தேடி வருகின்றனர்.