புழல் சிறையில் வெளிநாட்டு கைதி தாக்கியதில் துணை ஜெயிலர் காயம்...!

புழல் சிறையில் வெளிநாட்டு கைதி தாக்கியதில் துணை ஜெயிலர் காயம்...!

புழல் சிறையில், வெளிநாட்டு கைதி தாக்கியதில் துணை ஜெயிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புழல் சிறையில் நேற்று மாலை, துணை ஜெயிலர் சாந்தகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறை அருகே சென்ற போது, நைஜீரியா நாட்டை சேர்ந்த போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான இஜூபாஅகஸ்தின் சிபுக்கி என்பவர் சாந்தகுமாரிடம் ”எங்களை ஏன் இந்த சிறை அறைக்கு மாற்றம்  செய்தீர்கள்” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில், ஆத்திரமடைந்த கைதி, தான் வைத்திருந்த சாப்பாட்டு தட்டை சாந்தகுமார் மீது வீசியதில் அவரது கை விரலில் காயம் ஏற்பட்டது.

இதையும் படிக்க : செவிலியர்களுக்கு மாதம் 80ஆயிரம் சம்பளம்...வழியனுப்பி வைத்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

இச்சம்பவம் குறித்து புழல் காவல் நிலையத்தில் சிறை ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறை அலுவலர்கள் அந்தக் கைதிகளை வேறு அறைகளுக்கு மாற்றியதோடு, அவர்களை தீவிரமாக கண்காணித்த வண்ணம் இருந்துள்ளனர். இதன் காரணமாக சிறை போலீசாருக்கும், சிறைக் கைதிகளுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு கைதிகள் போலீசாரை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றபடியால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.