பொய் தகவல்களைப் பரப்பிய யூடியூபர் கைது!!!

யூடியூப் சேனலில் தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வீடியோ வெளியிட்ட யூடியூபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பொய் தகவல்களைப் பரப்பிய யூடியூபர் கைது!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த ஜனார்த்தனன் என்பவர் யூடியூப் (YouTube) சேனலை நடத்தி வருகிறார் அதில் தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் மேலும் 4 புதிய அறிவிப்புகள் என தலைப்பில் வீடியோ பதிவிட்டதாகவும் அதனை பார்த்த தாம்பரம் சேலையூர் பகுதியைச் சார்ந்த கார்த்தி என்பவர் தவறான தகவல்களின் மூலம் மக்களை குழப்புவதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த ஜனார்த்தனன் மீது சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவலர்கள் யூடியூபர் (youtuber) ஜனார்த்தனனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் மக்கள் அதிகம் கவரும் வண்ணம் வீடியோக்கள் போட்டால் வியூஸ் அதிகமாக வரும் அதனால் வருமானம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பதிவிட்டதாகவும் அவர் அந்த பதிவினை தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சி லோகோவை போன்ற ஒரு போலியான செய்தியை பார்த்து பதிவிட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட யூடியூப் ஜனார்த்தனன் நீதிமன்ற காவலில் படைக்கப்பட்டார்.