மாணவிகளை தண்டித்த தலைமை ஆசிரியர் பணி இட மாற்றம்...!

சேலத்தில் அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்த விவகாரத்தில் புகார் தெரிவித்த மாணவிகளை தண்டித்த பள்ளி தலைமை ஆசிரியர் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருப்பதாக மாணவிகள் சிலர் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்க : நடை பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போலீசார்...!

ஆனால் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் பள்ளி தலைமை ஆசிரியர் அந்த மாணவிகளை முட்டி போட வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரை கண்டித்து நூற்றுக்குமேற்பட்ட மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் செய்தனர். 

இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணியை இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.