வியாபாரி மகனைக் கத்தி முனையில் கடத்திய பயங்கரம்; தாம்பரத்தில் நடந்த சம்பவத்தால் பதற்றம்:

தாம்பரம் அருகே மாமூல் கேட்டு தர மறுத்த வியாபாரியின் மகனை  கத்தி முனையில் கடத்திச் சென்று விடிய விடிய கொடூரமாக தாக்கிய இரண்டு நபர்கள் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வியாபாரி மகனைக் கத்தி முனையில் கடத்திய பயங்கரம்; தாம்பரத்தில் நடந்த சம்பவத்தால் பதற்றம்:

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் சசிகுமார் (வயத-52) இவர் அனகாபுத்தூர் பஜார் சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

அப்பாவிற்க்கு உதவியாக அவரது மகன் யோகேஸ்வரன்(23) என்பவர் மளிகை கடையில் இருந்து வரும் நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு இரண்டு நபர்கள் கடைக்கு சென்று இனி எங்களுக்கு  மாதம் தோறும் மாமுல் கொடுக்க வேண்டும் எனக் கூறி பணம்   கேட்டுள்ளனர்,அதற்கு பணம் தர மறுத்த  யோகேஸ்வரனை  நாங்கள் இந்தப் பகுதி தாதா என்றும் எங்களுக்கு பணம் தர மாட்டியா உன்னை சாவடித்திடுவேன் கூறி யோகேஸ்வரனை கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் மளிகை கடை மூடிவிட்டு சுமார் இரவு 10:30 மணி அளவில் வீட்டுக்கு செல்வதாக இருசக்கர வாகனத்தில்  யோகேஸ்வரன் சென்று கொண்டிருக்கும் போது அங்கு மறைந்திருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் யோகேஸ்வரனை வழிமறித்து கத்தி முனையில் கடத்திச் சென்று பொழிச்சலூரில் உள்ள பாழடைந்த வீட்டுக்குள் கூட்டிச் சென்று கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துள்ளனர். இரவு முழுவதும் கத்தியை பின்பக்கம் திருப்பி விடிய விடிய கொடூரமாக தாக்கி துன்புறுத்தி உள்ளனர்.

அதன் பின்னர் கழுத்தில் அணிந்திருந்த 2,சவரன் தங்க சங்கிலி,ஒரு சவரன் மோதிரம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு இரவு முழுவதும் கஞ்சா போதையில் அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.

அங்கிருந்த ஆறு பேரும் கஞ்சா போதையில் தூங்கி விட்டதால் காலையில் பாழடைந்த வீட்டில் இருந்து யோகேஸ்வரன் தப்பி சென்று அவரது வீட்டுக்கு வந்துள்ளார். உடனே யோகேஸ்வரனை108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பெற்ற லோகேஸ்வரன் தன்னிடம்  மாமூல் கேட்டு தர மறுத்ததால் கத்தி முனையில் கட்டி சென்று விடிய விடிய கொடூரமாக தாக்கியதாக கூறி கதறினார்.

இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் 
யோகேஸ்வரனை கடத்திச் சென்று சித்திரவதை செய்திருந்த அந்த பாழடைந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லாததால் போலீசார் கடத்திச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிரமாக தேடி வநதனர்.

 காவல் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல்லாவரம் பாலத்தின் அடியில் தேடிச்செல்லும்போது ரயில்வே டிராக் அருகில் பதுங்கியிருந்தவர்கள் போலீசை பார்த்து ஓட முயன்ற போதுஅவர்களை  மடக்கிப்பிடித்து, காவல் நிலையத்தில் பிடித்து வந்து போலீசார் பாணியில் விசாரணை செய்த போது அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த  டைசன். 29, ஜெய்பிரகாஷ் 30, என தெரிய வந்தது. மேலும்  தப்பியோடிய போலீசாரை பார்த்து தப்பியோடிய  ஹரி மற்றும் ராஜன் ஆகியோரை தேடி வருகின்றனர். 

 போலீசாரிடம் சிக்கியவர்கள் கூறும் போது சம்பவ நடைபெற்ற அன்று கடைக்குச் சென்று  யோகேஸ்வரனிடம் மாமுல் தரவேண்டும் என கேட்டபோது ஏன் நான் தரணம், மாமுல் தர முடியாது என கூறி கோபமாக திட்டியதுடன்  இங்கிருந்து உடணே ஒடி போய்விடுங்கள்  இல்லையென்றால் போலீசாரிடம்  பிடித்து கொடுத்து விடுவேன் என மிரட்டியதால் தான்  அவரை கடத்திச் சென்று தாக்கியதாக   வாக்குமூல அளித்துள்ளனர்.

 மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.