ஆபாச செயலியால் வந்த வினை....உல்லாசம் அனுபவிக்க பணம் கட்டிய வாலிபர்..நாமம் போட்ட இளம்பெண்..கடையில் நடந்த ஷாக்.!

ஆபாச செயலியில் இழந்த பணத்தை மீட்கச் சென்ற வாலிபரிடம், கொள்ளையடித்த மோசடி கும்பலை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

ஆபாச செயலியால் வந்த வினை....உல்லாசம் அனுபவிக்க பணம் கட்டிய வாலிபர்..நாமம் போட்ட இளம்பெண்..கடையில் நடந்த ஷாக்.!

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சன். மெடிக்கல் ரெப்பாக பணியாற்றி வரும் இவர், லோகாண்டோ என்கிற செயலி மூலம் 5 ஆயிரம் ரூபாய் பணம் கட்டி பெண்களிடம் உல்லாசமாக இருக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது தெரியாத எண்ணில் இருந்து தொடர்ப்பு கொண்ட இளம்பெண் ஒருவர் சுதர்சனிடம் மிக நெருக்கமாக பேசியது மட்டுமல்லாமல், விரைவில் நேரில் சந்திக்கலாம் என உறுதியும் அளித்துள்ளார்.

மேலும் ஒரு நாள் முழுவதும் தன்னுடன் உல்லாசகமாக இருப்பதற்கு 5 ஆயிரம் ரூபாய் போதாது என கூறி, மேலும் இரண்டு தவணையாக 18 ஆயிரம் வரை அந்த பெண் பெற்றதாக கூறப்படுகிறது.

பணத்தை பெற்றுக்கொண்டு அந்த பெண் நேரிலும் வரவில்லை, போன் செய்தாலும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஆசையால் பணத்தை இழந்து பரிதவித்த சுதர்சன் எந்த செயலியின் வாயிலாக பணம் செலுத்தினாரோ அந்த செயலியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்து பணத்தை திரும்ப பெற முயற்சித்துள்ளார் சுதர்சன்.

அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அந்த இளம்பெண்ணின் செல்போனுக்கு சுதர்சன் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த பெண் பேசியுள்ளார். அவரிடம் தனது பணத்தை திருப்பி தரவில்லை என்றால் காவல் நிலையத்திற்கு சென்று மோசடி புகார் அளித்துவிடுவேன் என கூறியதாக தெரிகிறது.

அதற்கு அந்த இளம்பெண்ணும் ஈக்காட்டுத்தாங்கல் காசி திரையரங்கம் அருகே நேரில் வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அவர் சொன்னது போல் சுதர்சனும் அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு காத்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் சுதர்சனை தாக்கிவிட்டு அவரது இரு சக்கர வாகனம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.

மேலும் சிறிது நேரம் கழித்து போன் செய்த அந்த கும்பல் சுதர்ஷனிடம் காவல்துறைக்கு செல்லக் கூடாது எனவும் இரு சக்கர வாகனம் மற்றும் செயின் தேவை என்றால் மேலும் பணம் கொடுத்துவிட்டு பெற்றுக் கொள்ளுமாறும் மிரட்டி விட்டு போனை துண்டித்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த சுதர்சன் இச்சம்பவம் தொடர்பாக குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுதர்சனை தாக்கி இரு சக்கர வாகனம் மற்றும் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற 4 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.