வங்கி மேலாளராக நடித்து மூதாட்டியை ஏமாற்றிய வாலிபர்... 

பரமக்குடியில் வங்கி மேலாளர் எனக்கூறி, மூதாட்டியிடம் இருந்து ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். 

வங்கி மேலாளராக நடித்து மூதாட்டியை ஏமாற்றிய வாலிபர்... 

பரமக்குடி வங்கியில் மேலாளர் என ஏமாற்றி மூதாட்டியிடம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காந்திஜி நகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது.

பரமக்குடி கீழ பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி பாண்டியம்மாள்.55. கணவனை இழந்த நிலையில் வீட்டின் அருகில் அரிசி மாவு புட்டு வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். வங்கியில் வைக்கப்பட்டிருந்த நகையை திருப்புவதற்காக ரூபாய் ஒரு லட்சத்து 19 ஆயிரம் பணத்துடன் வங்கிக்கு வந்துள்ளார். அப்போது வங்கி மேலாளர் ஒருவர் என கூறிக்கொண்டு பாண்டியம்மாளிடம் இருந்த பணத்தை பெற்றுக்கொண்டு வங்கியின் வெளியே சென்று ஸ்டாம்ப் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

வெளியே சென்ற பாண்டியம்மாள் வங்கிக்குள் வந்து பார்த்தபோது மூதாட்டியை ஏமாற்றி பணத்துடன் வாலிபர் தப்பி ஓடிவிட்டார் என தெரியவந்தது. இதனையடுத்து பரமக்குடி குற்றப்பிரிவு போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அந்த வாலிபர் படிக்கட்டுகளில் நடந்து வரும் காட்சிகள் மட்டும் பதிவாகியுள்ளது. இதனையடுத்து பாண்டியம்மாள் புகாரின் பேரில் பரமக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். பரமக்குடியில் பட்டப்பகலில் வங்கியில் மூதாட்டியை ஏமாற்றி ஒரு  20 லட்சத்து 19 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.