கோயில் காளையை கடத்தி, கசாப்பு கடைக்கு விற்ற இளைஞர்கள்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கோயில் காளையை கடத்தி கசாப்பு கடைக்கு விற்ற இளைஞருக்கு கிராம மக்கள்  தரும அடி கொடுத்த சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் அடுத்த குடிமேனஹள்ளி கிராமத்தில் உள்ள பழமையான பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய காளை மாட்டை, அந்த கிராமத்து மக்கள், தங்கள் வீட்டில் ஒருவராக நினைத்து வளர்தும், தினம் தோறும் இந்த களையை பராமரித்து சாமியாகவே வழிபாடு செய்தும் வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 5 நாட்களாக கோவில் காளையை கிராமத்தில் காணவில்லை. பின்னர் கிராம மக்கள் சுற்று வட்டார கிராமங்களில் தீவிரமாக தேடிவயுள்ளனர். இதில் கோவில் காளையை சில மர்ம நபர்கள் டெம்போவில் ஏற்றி சென்றதை, சிறுவன் ஒருவன் கூறவே கிராம மக்கள் டெம்போவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் அங்குள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமாராவில் பதிவான அந்த வண்டியின் பதிவு எண்ணை கொண்டு விசாரித்ததில், அந்த டெம்போ ஊத்தங்கரை அடுத்த ஆனந்தூர் அருகே உள்ள ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவருடையது என்பது உறுதியானது. பின்னர் அவரைப் பிடித்து கிராம மக்கள் விசாரித்த போது மாடு ஏற்ற வாடகைக்கு அந்த டெம்போவை அதே கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார்.

அந்த கிராமத்திற்கு சென்று அந்த இளைஞர்களை விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து கிராம மக்களை அங்கிருந்து விரட்டி உள்ளனர். பின்னர் ஊருக்கு வெளியே காத்து இருந்த கிராம மக்கள், அந்த இளைஞர்களில் ஒருவர் ஊருக்கு வெளியே வந்த போது அவரை பிடித்து சிறை பிடித்தனர். 

பின்னர் அந்த இளைஞர் கேட்ட உணவு முதற்கொண்டு பிரியாணி வரையில் வாங்கி அவரிடம் காலை முதல் விசாரித்துள்ளனர். ஆனால் பதில் ஏதும் கூறாமல் மௌனம் காத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கி விசாரணை செய்ததில், அந்த காளை மாட்டை கடத்திச் சென்று சேலத்தில் உள்ள கசாப்பு கடையில் ஒன்றில் விற்று விட்டது தெரிய வந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கினார். மேலும் அந்த மாடு திருட்டில் ஈடுபட்ட மற்ற இளைஞர்களுக்கு அந்த நபர் போன் செய்த பொழுது அனைவரும் போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.