இருவரை பிணை கைதிகளாக பிடித்து வைத்த பணம் கேட்ட கும்பல்...

பிணை கைதிகளாக இருந்த ஹைதராபாதை சேர்ந்த இருவர் மீட்கப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட 11 பேர் கைதாகியுள்ளனர்.

இருவரை பிணை கைதிகளாக பிடித்து வைத்த பணம் கேட்ட கும்பல்...

கோவாவில் இருந்த ஹைதராபாதைச் சேர்ந்த இரண்டு பேரை பிணை கைதிகளாக வைத்துக் கொண்டு அவர்களை வைத்து பணம் பறிக்க முயன்றதாக தகவல் கிடைத்ததி அடுத்து, கோவா போலீசார் அவர்களை மீட்டு இதற்கு காரணமான 11 பேரைக் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் முதலாளி செய்த விஷயத்தால் வேண்டும் என்றே இருவரை கடத்தி பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. 

மேலும் படிக்க | ரயில் வர தாமதமா..... 20 ரூபாயில் தங்கும் விடுதி.... ரயில்வேயின் சிறப்பு திட்டம்!!!

குற்றம் சாட்டப்பட்டவருக்கு, புகார்தாரர் ஜெய்ராம் குமாருடன் சுரங்க நடவடிக்கைகள் தொடர்பாக சில தகராறுகள் இருந்தன. அவர்கள் தனது இரண்டு ஊழியர்களை கோவாவிற்கு அழைத்து, அவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து, அவர்களை விடுவிக்க குமாரிடம் 4 கோடியை மீட்கும் தொகை கேட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) என்ற தடை செய்யப்பட்ட அமைப்பில் தொடர்பு இருப்பதாகக் கூறி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஹைதராபாத் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ஏடிஎம் கொள்ளையர்களை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு!