மாநகரப் பேருந்தின் ஓட்டுனரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது..

சென்னையில் மாநகரப் பேருந்தின் ஓட்டுனர் தாக்கிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாநகரப் பேருந்தின் ஓட்டுனரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது..

சென்னையில் மாநகரப் பேருந்தின் ஓட்டுனர் தாக்கிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை தண்டையார்பேட்டை கார்ப்பரேஷன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (43). இவர் மாநகரப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று சந்திரகுமார் ஓட்டிவந்த மாநகரப் 56D பேருந்து மாத்தூர் பகுதியில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கார்கில் நகர் அருகே ஏறிய 2 இளைஞர்கள் தொடர்ந்து படிக்கட்டில் தொங்கியபடியே வந்ததால் ஓட்டுனர் அவர்கள் இருவரையும் உள்ளே வரும்படி வற்புறுத்தியுள்ளார். இளைஞர்கள் மறுக்கவே பேருந்தை நிறுத்தி உள்ளே வரும்படி நடத்துனரும், ஓட்டுனரும் தெரிவித்துள்ளனர். 

இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வீண் தகராறு செய்த இளைஞர்கள் ஓட்டுனரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் நெற்றி மற்றும் கண் பகுதியில் காயம் ஏற்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓட்டுநர் சந்திரகுமார் வீடு திரும்பினார். இதற்கிடையில் ஓட்டுனர் சந்திரகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்த அஜய் மற்றும் பிரதீப்குமார் என்ற இருவரை திருவொற்றியூர் போலீசார் கைது செய்தனர். அவ்விருவரும் தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் வாட்டர் வாஷ் வேலை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.