"ஆளுநர் மாளிகையில் குண்டு வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது" உதயநிதி கண்டனம்!

"ஆளுநர் மாளிகையில் குண்டு வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது" உதயநிதி கண்டனம்!

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக ஒரு நாள் பயணமாக தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார் அமைச்சர் உதயநிதி. அதைத்தொடர்ந்து, தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கூட அரங்கில் துறை சார்ந்த அதிகாரியுடன்  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேனி மாவட்டத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் திட்ட அலுவலர்கள் அரசுத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் சில திட்டங்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளது, சில திட்டங்களில் தொய்வு உள்ளது மாவட்ட ஆட்சியரிடம் அதனை சரி செய்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எதிர்க்கட்சி மற்றும் பிஜேபி கட்சியினர் சட்ட ஒழுங்கு குறித்து விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், "எந்த ஒரு வன்முறையும் அரசு ஏற்றுகொள்ளாது.
ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், "நீட்டை அரசியல் ஆக்க வேண்டாம். இது திமுக உடைய பிரச்சனை கிடையாது. ஒட்டுமொத்த மாணவர்களின் பிரச்சனை. 22 மாணவர்கள் எந்தவித இயக்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் மாணவர்கள் . அனைவரும் சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். நீட் விளக்கு ஏற்பட்டால் ஒட்டுமொத்த பெருமையும் அதிமுக கூட எடுத்துக் கொள்ளட்டும். எங்களைப் பொறுத்தவரை நீட் தேர்வு தடை செய்யப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.