வில்லன் நடிகரிடம் மோசடி; திமுகவினர் மீது புகார்!

வில்லன் நடிகரிடம் மோசடி; திமுகவினர் மீது புகார்!

மோசடியில் இழந்த 53 லட்சம் பணத்தை பெற்று தருவதாக கூறி  2.50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் காரை பெற்று மோசடி செய்த திமுக பிரமுகர்கள் மீது பாதிக்கப்பட்ட வில்லன் நடிகர் புகார் அளித்துள்ளார். 

சாலிகிராமத்தை சேர்ந்த ஆத்மா பேட்ரிக்(42), இவர் சினிமாவில் வில்லன் நடிகராக நடித்து வருகிறார். இவர் டாக்டர், காஞ்சனா 3, சத்யா, உள்ளிட்ட தமிழ் சினிமா திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு அசோக் நகரை சேர்ந்த அனிதா சுரேஷ் என்பவர் லைப் இன்சூரன்ஸில் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளார். அதில் முதலீடு செய்தால் லாபம் பெருமடங்கு பெறலாம் என பேட்ரிக்கிடம் ஆசை வார்த்தைகள் கூறி  53 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார். 

இது தொடர்பாக அனிதா சுரேஷ் மீது ஆத்மா பேட்ரிக் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்து அதன் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் இழந்த பணத்தை மீட்டு தருமாறு ஆத்மா பேட்ரிக் திமுக பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவரான கமல் மற்றும் அவரது நண்பர் ஆனந்த் ஆகியோரிடம் உதவி கேட்டுள்ளார். போலீசிடம் அழுத்தம் கொடுத்து இழந்த பணத்தை  அவர்கள்  பெற்று  தருவதாக கூறி பேட்ரிக்கிடம் 2.50 லட்சம் பணம் மற்றும் ஒரு சொகுசு காரை வாங்கிக் கொண்டனர்.

53 லட்சம் பணத்தை மீட்க இரண்டரை லட்சம் பணம், காரை வாங்கி கொண்ட திமுக பிரமுகரான கமல், ஆனந்திடம் பலமுறை ஆத்மா பேட்ரிக் கேட்டும் எந்த நடவடிக்கைகள் எடுக்காவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆத்மா பேட்ரிக் தாம் இழந்த பணத்தை மீட்க பணத்தை மோசடி செய்த கமல், ஆனந்த் குறித்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறைக்கு புகார் அளித்துள்ளார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் அதிகாரிகள்  இது குறித்து உரிய விளக்கமும் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சந்திப் ரத்தோருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை அடுத்து சென்னை காவல் ஆணையர், சம்பவம் நடைபெற்ற காவல் நிலைய உட்பட்ட பகுதியான கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு ஆத்மா பேட்ரிக்கின் புகாரை அனுப்பியுள்ளார். புகாருக்குள்ளான கமல் மற்றும் ஆனந்த் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜாவிற்கு நெருக்கமானவர்கள் திமுகவில் பொறுப்பிலும் இருக்கின்றனர். கே.கே . நகர் போலீசார் திமுக பிரமுகர்களின் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: அமைச்சர் மா.சுப்ரமணியனுடன் சேர்ந்து நடைபயிற்சி மேற்கொண்ட 300க்கும் மேற்பட்டோர்!!