விதிமுறைகளை மீறிய பெண்கள்..புகார் அளித்தவரை செருப்பால் அடித்ததால் அதிர்ச்சி...!

விதிமுறைகளை மீறிய பெண்கள்..புகார் அளித்தவரை செருப்பால் அடித்ததால் அதிர்ச்சி...!

மூன்று பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்றதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளித்த இளைஞரை, செருப்பால் தாக்கிய பெண்களால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் அளித்த புகாரை அடுத்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

சென்னை அடையார் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி எதிரே உள்ள பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் மூன்று பெண்கள் ஒன்றாக பயணித்துள்ளனர். உடனே, அவர்களை மடக்கி பிடித்த போக்குவரத்து காவலர் ராஜேஷ், இது குறித்து விளக்கம் கேட்டபோது உடல்நிலை சரியில்லை என கூறி அங்கிருந்து வேகமாக தனது ஆண் நண்பர்களுடன் வாகனத்தை எடுத்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, போலீசாருடன் வாக்குவாதத்தில் அந்த பெண்கள் ஈடுபட்டிருந்த போது, அருகில் டீ குடித்துக் கொண்டிருந்த அருண் குமார் விக்ரம் என்ற நபர், அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அதனை அறிந்த ஒரு பெண் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் வீடியோ எடுத்த நபரை தாக்கி, ஆபாசமாக பேசியதுடன் விடாமல், செருப்பையும் கழட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : 200 மீட்டர் உள்வாங்கிய கடல் - அச்சத்தில் மீனவ மக்கள்!

இதனை கண்ட போக்குவரத்துக் காவல்துறை காவலர் ராஜேஷ், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதனைத்தொடர்ந்து, தான் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அருண் குமார் விக்ரம், பெருநகர சென்னை மாநகர காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கு புகார் அளித்ததோடு, தன்னை தாக்கிய மூன்று பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதை அடுத்து, முதற்கட்டமாக அந்த இருசக்கர வாகன பதிவெண் அடிப்படையில் ஹெல்மட் அணியாமல் அணிந்து வந்ததற்காக 1000 ரூபாய் அபராதமும் இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்ததின் அடிப்படையில் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஒரு நபரை செருப்பால் அடித்ததற்கும், காலால் எட்டி உதைத்ததற்கும் அபிராமபுரம் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.