நேர்காணல்... கனடாவில் பயிற்சி... வேலை: ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்த நபர்!

நேர்காணல்... கனடாவில் பயிற்சி... வேலை: ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்த நபர்!

பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல ஆசை வார்த்தைகளை பேசி ரூ 13 லச்சம் வரை மோசடி செய்த நபர் காவல் துறையினரால் கைது செய்துள்ளனர்.

சென்னை பெரம்பூர் மதுரைசாமி மடம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார் (49). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 

கடந்த 2022 ம் ஆண்டு  முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கௌதம் குமார் (43) என்பவர் மோகன் குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு திருவள்ளுவரில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் வேலை இருப்பதாக கூறி ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதற்கு முன்பணம் ரூ 50  ஆயிரம் வேண்டுமெனவும் கேட்டுள்ளார். 

கெளதம் குமார் கூறியவற்றை, உண்மை என நம்பிய மோகன் குமார் பணத்தை கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து, கௌதம் குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, வேலை தன்மை, நேர்காணல், கனடாவிற்கு பயிற்சி என பலவிதமாக பொய்களை கூறி சிறுக சிறுக ரூ 13 லட்சம் வரை பெற்றுள்ளார்.  

இந்நிலையில், ஒரு கட்டத்தில், மோகன் குமாருக்கு, கௌதம் குமாரின் மேல் சந்தேகம் எழுந்துள்ளது. அதன் பின்னரே, கெளதம், பணத்தை வாங்கி  ஏமாற்றியதாக, மோகன் குமார் திரு.வி.க நகர்  போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

மோகன் குமார் கொடுத்த புகாரின் பேரில் திரு வி க நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, கௌதம் குமாரை கைது செய்து  சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிக்க || திருமணமான பத்தே மாதங்களில், பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!