77 பக்கங்களுக்கு கடிதம்!!! மகனால் தாயிற்கு நேர்ந்த கொடூரம்!!!

தனது தாயைக் கொன்ற பிறகு, தானும் தற்கொலை செய்த 25 வயது நபர், 77 பக்கங்களுக்கு தற்கொலை கடிதம் எழுதியிருக்கிறார்.

77 பக்கங்களுக்கு கடிதம்!!! மகனால் தாயிற்கு நேர்ந்த கொடூரம்!!!

வேலையின்மை இந்த காலத்து இளைஞர்களுக்கு ஒரு மாபெரும் மனவலியைக் கொடுத்துள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை. காசு இல்லை, வேலை இல்லை, வாழ்க்கை இல்லை என நினைத்து கவலையில் துடித்து வருபவர்கள், மன அழுத்தத்திற்கு ஆளாகும் அவல நிலை தற்போது ஏற்பட்டு வருவதை இன்று வரை நாமே நேரில் பல பேரைப் பார்த்திருப்போம். அப்படி ஒரு மன அழுத்தத்திற்கு ஆளான 25 வயது இளைஞர் செய்த் அகாரியம், பலரை உலுக்கிப் போட்டுள்ளது.

டெல்லி, ரோகிணி பகுதியைச் சேர்ந்த ஷிதிஜ் (Kshitij) என்பவர், தனது தாய் மிதிலேஷ் என்பவரை கொன்று, தானும் தற்கொலை செய்திருக்கிறார். அக்கம் பக்கத்தினர், அவர்கள் வீட்டில் இருந்து துற்நாற்றம் வந்தது குறித்து புகார் எழுப்பிய்தன் மூலம், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இறந்த ஷிதிஜ் அருகில் சுமார் 77 பக்கங்களுக்கான தற்கொலை கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தனலட்சுமி என்னை வாழவிடவில்லை : தற்கொலை செய்த டிராவல்ஸ் உரிமையாளர் !!

நேற்று, செப்டம் 4ம் தேதி, ரோகிணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில், கொடூரமான துற்நாற்றம் வந்திருக்கிறது. இதனை அடுத்து, ரோகிணி காவல் நிலையத்திற்கு அப்பகுதியினர் புகார் எழுப்பியுள்ளனர். வீட்டைத் தட்டிப் பார்க்கும் போது, உள் பக்கம் தாழ்பாள் போட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், பால்கெனியில் இருந்து கதவை உடைத்துக் கொண்டு அதிகாரிகள் வீட்டிற்குள் புகுந்த போது அதிர்ச்சி அவர்களுக்குக் காத்திருந்தது.

ரத்த வெள்ளத்தில், கழுத்து அறுபட்டு 25 வயது தக்க ஒரு இளைஞனின் சடலமும், மட்கிய நிலையில் அந்த இளைஞரின் தாய் உடல் கழிவறையில் கிடைத்திருக்கிறது. ஷிதிஜ் என அடையாளம் காணப்பட்ட பிறகு, அவரது அருகில் இருந்த கடிதத்தை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதில் “தான் மன அழுத்தத்தில்” இருப்பதாகவும், வேலை வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் கவலையில் இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. இதனால், தனது தாயை தானே கொன்றதை அக்கடிதத்தில் ஒப்புக் கொண்டு, பின், தானும் தனது கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்திருக்கிறார்.

மேலும் படிக்க | பெற்றோர்கள் கண்டித்ததால் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை..!

இது குறித்து ரோகிணி துணை ஆணையர் பிரனவ் டாயல் என்பவர், அந்த இளைஞர் 4ம் தேதி தான் தற்கொலை செய்து கொண்டதாகவும், தாயை இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே கொன்றதாகவும் தெரிவித்தார். மேலும், சம்பவ இடத்திற்கு குற்றப் பிரிவு மற்றும் தடய அறிவியல் ஆய்வகக் குழுக்களை அனுப்பியுள்ளதாகவும், இந்த வழக்கில் சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எந்த வித தவறுகளும், திருடோ அல்லது போராட்டங்களோ நடந்த ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில், இது கொலை மற்றும் தற்கொலை தான் என்பது நன்றாத ஊர்ஜிதமானது என தெரிவித்த காவல் துறையினர், இவர்கள் குறித்து குடும்பத்தினருக்கு தகவல் அளித்து வருவதாகக் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மனைவியை ஊசியால் குத்தி குத்தி சித்ரவதை செய்த கணவர்.. மனைவியின் விபரீத முடிவு..!