ஆட்டுக்குட்டி மேய்ந்ததால், வீட்டை கொளுத்திய பெண்கள்: நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்!

ஆட்டுக்குட்டி மேய்ந்ததால், வீட்டை கொளுத்திய பெண்கள்: நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்!

கள்ளக்குறிச்சி: ஆட்டுக்குட்டி தனது வீட்டிற்கு வந்து மேய்ந்ததால், உரிமையாளரின் வீட்டை கொளுத்தியுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால், சத்யா தம்பதி. இவர்கள் ஆட்டுக்குட்டி ஒன்று வளர்த்து வந்துள்ளார்கள். இவர்களின் பக்கத்தில் வீட்டில் வசிப்பவர்கள், சின்னத்தம்பி மற்றும் விருத்தாம்பாள். இவர்களுக்கு மல்லிகா மற்றும் சரண்யா என இரண்டு மகள்கள் உண்டு. சத்தியாவின் ஆட்டுக்குட்டி, விருத்தாம்பாளின் வீட்டிற்கு சென்று மேய்ந்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து அவ்வவ்போது, விருத்தாம்பாள் சத்யாவிடம் முறையிட்டுள்ளார்.

சில சமயங்களில், வாக்குவாதம் கைகலப்பாகவும் மாறியுள்ளது. இது போலவே, சமீபத்தில், ஆட்டுக்குட்டி தனது  வீட்டிற்கு வந்து மேய்ந்தால் ஆத்திரமடைந்த விருத்தாம்பாள், சத்யாவிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளார். சத்யாவை கட்டையால் தாக்கவும் செய்துள்ளார். இதில் காயமடைந்த சத்யா அரசு மருத்துவமைனயில், காயத்திற்கு சிகிச்சையும் பெற்றுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும், இரவு, கணவர் மற்றும் குழந்தைகள் உறங்கிக்கொண்டிருந்த பொழுது, திடீரென்று வீடு பற்றியதை உணர்ந்த தம்பதி, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்து நூலிழையில், உயிர் தப்பியுள்ளனர். வீட்டை விட்டு வெளியேறும் பொழுது, மல்லிகா மற்றும் சரண்யா ஓடுவதை கோபால் மற்றும் அவரது மனைவி சத்யா பார்த்துள்ளனர்.

வீடு முழுவதும் தீ பற்றிஎரிந்ததால், பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது. இது குறித்து, கோபால் தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், விருத்தாம்பாள் மற்றும் அவரது கணவர் சின்னத்தம்பி ஆகியோரை கைது செய்துள்ளனர். மல்லிகா மற்றும் சரண்யா தலைமறைவான நிலையில், அவர்களை தேடி வருகினறனர்.

மனிதர்கள், தான் வாழும் பகுதியில், சுற்றி இருப்பவர்களை அனுசரித்து, அவர்களுடன் பண்போடு பழகி சமூகத்தை மேல்நோக்கி உயர செய்வதே மானுட மாண்பு. பக்கத்து வீட்டின் ஆட்டுக்குட்டி, தனது வீட்டிற்கு வந்து மேய்ந்ததால், ஆட்டுக்குட்டியின் உரிமையாளர் வீட்டை கொளுத்தியுள்ள மனிதநேயமற்ற செயல், அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.