விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் , செல்போனில் மூழ்கிய அதிகாரிகள்!

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் , செல்போனில் மூழ்கிய அதிகாரிகள்!

திண்டுக்கல் அருகே விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், அதிகாரிகள், விவசாயிகளின் குறைகளுக்கு செவி சாய்க்காமல், செல்போனில் மூழ்கியிருந்தது விவசாயிகளின் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த விவசாயிகள் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, நூற்றுக்கணக்கான விவசாயிகள், தங்களது கோரிக்கைகளை ஆட்சியர் முன்னிலையில் தெரிவிப்பார்கள். 

இது சம்பந்தமாக, ஆட்சியர் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவு தருவார். விவசாயிகள் குறைதீர்க்க கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு துறை அதிகாரிகள், ஆட்சியரின் ஆலோசனை கவனிக்காமல், தங்களுடைய செல்போனில் அயர்ந்து வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதலங்களிள் மூழ்கியிருந்துள்ளனர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு, அதிகாரிகள் இப்படி பொறுப்பே இல்லாமல் செல்போனில் மூழ்கியிருப்பது, விவசாயிகளின் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற காரியங்கள் வழக்கமாக நடைபெறுகின்றது எனவும், அதிகாரிகளின் செல்போன்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் விவசாயிகள்.

இதையும் படிக்க: அலட்சியமாக உறங்கிய செவிலியர்கள்...மருத்துவ உதவி கிட்டாமல் உயிரிழந்த குழந்தை!!