புறம்போக்கு இடத்திற்கு பட்டா...வட்டாட்சியர் சிறைபிடிப்பு!

புறம்போக்கு இடத்திற்கு பட்டா...வட்டாட்சியர் சிறைபிடிப்பு!

திருத்தணி அருகே பழமைவாய்ந்த வேப்ப மரத்தை வெட்ட, அனுமதி  அளித்த வட்டாட்சியரை கிராம மக்கள் சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் விலக்கனாம்பூடி பூதூர் ஊராட்சியில் சாலை புறம்போக்கு இடத்திற்கும் மற்றும் அதன் அருகில் உள்ள கால்வாய் புறம்போக்கு இடத்திற்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த பட்டாவை ரத்து செய்யக்கோரி பல நாட்களாக மனு அளித்துள்ளனர் அந்த பகுதி மக்கள். ஆனால்,  வட்டாட்சியர் விஜயகுமார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்.கே.பேட்டை தாலுகா விலக்கனாம்பூடி பூதூர் ஊராட்சியில் நுழைவாயில் முன்பு சாலை புறம்போக்கு இடத்திற்கு மற்றும் அருகில் இருந்த கால்வாய் புறம்போக்கு இடத்திற்கு பட்டா வழங்கிய ஆர்.கே. பேட்டை வட்டாட்சியர்  கண்டித்து மேலும் அந்த பட்டாவை ரத்து செய்யக்கோரி பல நாட்களாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த வட்டாட்சியர் விஜயகுமாரை கண்டித்து,

இதேபோல் 30 ஆண்டு பழமையான வேப்ப மரத்தை அகற்றுவதற்கு அனுமதி அளித்த வட்டாட்சியர் விஜயகுமாரை கண்டித்து இந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும், பேச்சுவார்த்தைக்கு மக்கள் உடன்படவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் விஜயகுமார், சாலை மறியலை கைவிடும் படியும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். ஆனால், அவரது பேச்சையும் ஏற்க மறுத்து, புறம்போக்கு நிலத்தை, வாட்டாச்சியர் அலுவலகத்தில் தரகராக பணிபுரியும் ரவி என்பவருக்கு பட்ட வழங்கியது கண்டனத்திற்குரியது என குற்றம்சாட்டி, வட்டாச்சியர் விஜயகுமாரை சிறை பிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நீண்ட நேரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர், மக்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிக்க: நாட்டியப்பள்ளி ஆசிரியைக்கு சா்வதேச விருது!