கடத்தப்பட்ட மாற்றுத்திறனாளி... அலட்சியம் காட்டும் காவல்துறை!!

கடத்தப்பட்ட மாற்றுத்திறனாளி... அலட்சியம் காட்டும் காவல்துறை!!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கடத்தப்பட்ட மாற்றுத்திறனாளி நபரை கண்டுப்பிடிப்பதில் காலம் அலட்சியம் காட்டுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெடுவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். மாற்றுத்திறனாளியான இவர் னது மூன்று சக்கர சைக்கிளில் ஊர் ஊராக சென்று காகிதம், பழைய பாட்டில்களை சேகரித்து அதனை விற்று பிழைப்பு நடத்தி வந்தார். 

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று காலையில் ராஜேந்திரன் மூன்று சக்கர சைக்கிளில் ஆண்டார்குப்பத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக சென்னிவாக்கம் அருகே வந்தபோது மர்மநபர்கள் சிலர் அவரை காரில் கடத்தி சென்றதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரனின் மனைவி சந்திராவிடம் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சந்திரா பொன்னேரி காவல்நிலையத்தில் தனது கணவர் காரில் கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார். மேலும் அந்த நேரத்தில் அந்த பகுதியில் ஆந்திர பதிவெண் கொண்ட கார் நின்றிருந்ததையும் பொதுமக்கள் சிலர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் கடத்தப்பட்டு 3 நாட்களாகியும் போலீசார் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. ராஜேந்திரன் கடத்தப்பட்டு மூன்று நாளாகியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அவரது மனைவி மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பொன்னேரி காவல் நிலையத்திற்கு வந்து முறையிட்டனர். 

பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், ஏதேனும் கடன் பிரச்சினையில் கடத்தப்பட்டாரா, உடலுறுப்புக்களை திருடும் கும்பல் கடத்தியதா அல்லது நரபலி கும்பல் ஏதேனும் கடத்தியா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க || ஜாமினில் வெளிவந்த நபர்... அடுத்த நாளே நடந்த கொடூரம்!!