'ரூட்டு தல'; கல்லூரி மாணவர்கள் மோதல்: - அச்சத்தில் பொதுமக்கள் ..!

'ரூட்டு தல'; கல்லூரி மாணவர்கள் மோதல்:  - அச்சத்தில் பொதுமக்கள் ..!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட ரூட்டு தல பிரச்சினையில் மாணவர்கள் மோதிக் கொண்டதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். 

வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்தானது அரும்பாக்கம்  என்எஸ்கே நகர் பேருந்து நிலையத்தில் நின்ற போது பேருந்தில்  இருந்த ஒரு பிரிவு மாணவரை மற்றொரு பிரிவினர் தாக்கியதால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சுமார் 50 மேற்பட்ட மாணவர்கள் கத்தி மற்றும் கட்டையாலும் மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர்.

மேலும் கீழே கிடந்த கற்களாலும், மதுபாட்டில்களை கொண்டும் ஒருவர் மீது ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். மாணவர்கள் மோதுவதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

இது குறித்து காவல் கட்டுபாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் பேரில் அரும்பாக்கம் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதை பார்த்ததும்,  மாணவர்கள் கையில் கத்தியோடு பேருந்துகளிலும், சாலையிலும் ஓடியுள்ளனர். 

மேலும் சில மாணவர்கள் சாலையில் செல்லும் ஆட்டோவில் ஏறி தப்பியுள்ளனர். இந்த மோதல் சம்பவத்தில் ஒரு மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் ரூட் தல விவகாரத்தில் மோதி கொண்டதாகவும், அரும்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அரும்பாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே 2019 ஆண்டு இதே பகுதியில் கல்லூரி மாணவர்கள் மாறி மாறி வெட்டி கொண்ட தும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க   | போலீசுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!