கொள்ளையடிக்க வந்த இடத்தில், பூட்டை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய திருடர்கள்!

கொள்ளையடிக்க வந்த இடத்தில், பூட்டை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய திருடர்கள்!

கும்மிடிப்பூண்டி அருகே கோவிலின் பூட்டை உடைக்க முடியாததால் விரக்தியில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர் கொள்ளையர்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் தனியார் கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற பால் முனீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது.

இந்த கோவிலில் கடந்த 24ஆம் தேதி அதிகாலை மர்ம கும்பல் ஒன்று பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளது. மேல்சட்டை ஏதும் அணியாமல், அரைகால் சட்டை மட்டுமே போட்டுகொண்டு, முகமூடி அணிந்த டவுசர் கொள்ளையர்கள் 3 பேர் கொண்ட கும்பல், அதிகாலை நேரத்தில் வந்துள்ளனர்.

கோவில் அருகே யாரும் இல்லை என்பதை நோட்டமிட்டு, கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்துள்ளனர். மொத்தம் 3 பேர் கொள்ளையடிக்க வந்த நிலையில், இருவரை வெளியே காவலுக்கு நிற்க வைத்துவிட்டு, ஒருவர் மட்டும் கோவிலின் உள்ளே கடப்பாரையுடன் சென்று பூட்டை உடைக்க முயற்சிக்கிறார். 

கடப்பாரையை கொண்டு நீண்ட நேரம் முயற்சித்தும், கோவில் கதவின் பூட்டை உடைக்க முடியாமல் உறுதியாக இருந்ததால், கொள்ளையடிக்கும் திட்டத்தை விட்டுவிட்டு, அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்த சம்பவம் அணைத்தும், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கப்படாத நிலையில், இதுகுறித்து சிப்காட் போலீசார் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊழலில் ஈடுபட்ட மாவட்ட பதிவாளர் பணிநீக்கம்!