பெண் தற்கொலை...! 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி...!!

பெண் தற்கொலை...! 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி...!!

மதுரை அருகே பஸ்சில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்கள் ஜாமின் கோரிய வழக்கை உயர் நீதி மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் மையிட்டான்பட்டி கிராமத்தில் நூறு நாள் வேலை பணித்தள பொறுப்பாளராக பணியாற்றினார். கலெக்டர் உத்தரவுப்படி நேரடியாக நாகலட்சுமி பணியில் சேர்ந்ததால் மையிட்டான்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாலமுருகன், உறுப்பினர் வீரக்குமார், எழுத்தர் முத்து ஆகியோர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், கலெக்டரிடம் புகாரளிக்க மதுரை சென்றபோது ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்தார். இவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு பஞ்சாயத்து துணைத் தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட 3 பேர் தான் காரணம் என கூறியிருந்தார். இதன்படி பாலமுருகன் உள்ளிட்ட 3 பேர் மீது கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

இதில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி பஞ்சாயத்து துணைத் தலைவர் பாலமுருகன்(46), உறுப்பினர் வீரக்குமார்(33) ஆகியோர் ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இருவரின் முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.