மழைநீர் மூடுகால்வாய் பணிகளை நேரில் ஆய்வு செய்த நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு

வடக்கிழக்கு பருவமழைக்கு முன்னதாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

மழைநீர் மூடுகால்வாய் பணிகளை நேரில்  ஆய்வு செய்த நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு

அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகும் பகுதிகள்

பெரும்பாலும் சென்னையில் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகும் வேளச்சேரி, மடிப்பாக்கம், மிகவும் தாழ்வான பகுதிகளான கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, அரசன்கழனி, டிஎல்எப் சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை, போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும்.

அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

ஒவ்வொரு பெருமழையின் போதும் சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக மழைநீர் தேங்கி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பள்ளிகரணை, சுண்ணாம்பு கொளத்தூர், நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்புநில பகுதிக்கு மழைநீர் பாதிப்பை தடுக்கும் வகையில் நடைபெற்று வரும் மூடுகால்வாய் பணிகளை நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார் அப்போது மழைநீர் செல்லும் வழியின் வரைப்படத்தை அமைச்சருக்கு அதிகாரிகள் காண்பித்தனர் மற்றும் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க: திருநங்கையை பீனால் குடிக்கசெய்த குற்றவாளிகள்...காரணம் என்ன?

இதை தொடர்ந்து செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், டிஎல்எப் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் மூடுகால்வாய் பணிகளையும் அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது கால்வாய் கட்டும் ஒப்பந்ததாரரிடம் பணிகள் விரைந்து முடித்துதர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.