ஓவியம்,நடனம்,பாட்டு போட்டிகளில் அசத்திய மாணவர்கள்...

ஓவியம்,நடனம்,பாட்டு போட்டிகளில் அசத்திய மாணவர்கள்...

வேலூர் | காட்பாடியில் லத்தேரியில் மாணவர்களிடம் உள்ள திறமைகளை வெளிகொண்டு வரும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. ஓவிய போட்டிகள் இசைப்போட்டி பாட்டு போட்டி நடனம் இசைகருவிகளை வாசிப்பது பாரம்பரிய நடனம் மற்றும் கிளாசிக்கல் நடனம் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றது.

இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை அபாரமாக வெளிப்படுத்தினார்கள்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அரசு அருங்காட்சியக காப்பாட்ச்சியர் சரவணன், போட்டியின் ஒருங்கிணியப்பாளர் சிவசங்கரி ஆகியோர் பரிசுகள் சான்றுகள் கோப்பைகளை ரொக்கபரிசுகளை வழங்கினார்கள். இதில் பெற்றோர்கள் மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

இதே போன்று வேலூர் சத்துவாச்சாரி மாநகராட்சி விளையாட்டு மனமகிழ்மன்றத்தில் ஜுடோ போட்டிகளும் நடத்தப்பட்டது இதில் திரளான மாணவர்களும் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமூகத்தை ஏற்படுத்த மாரத்தான் போட்டி...! டிஜிபி பங்கேற்பு...!