வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்யும் அரிக்கொம்பன்...!!

வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்யும் அரிக்கொம்பன்...!!

சின்னமனூர் அருகே உள்ள மேகமலை வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை ஆக்ரோஷத்துடன்  வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்துவருகிறது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் மேகலை வனப்பகுதியின் அருகே மூணாறில் அச்சுறுத்தி வந்த அரி கொம்பன் யானையை  கேரளா வனத்துறையினர் தேக்கடி சரணாலத்தில் இருந்து  மீட்டுக் கொண்டு வந்து வனப்பகுதியில் விடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அரிகொம்பன் யானை கேரளவனப் பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதியான கண்ணகி கோட்டம் வழியாக  ஹைவேவிஸ், மேகமலை தேயிலைத் தோட்ட வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடி பொது மக்களுக்கு பெரிதும் உயிர் பயத்தை ஏற்படுத்தி வருகிறது.

இன்று அதிகாலை மேகமலை தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பின் அருகே பத்துக்கோடு பகுதியில் உள்ள காபித் தோட்ட குடியிருப்புக்குள் புகுந்த அந்த அரி கொம்பன் யானை வீட்டினை உடைத்து சேதப்படுத்தி தொழிலாளர்கள் சமைப்பதற்காக வாங்கி வைத்திருந்த அரிசியினை தேடி எடுத்து சாப்பிட்டுள்ளது. அதைப் பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்து உயிர் தப்பி ஓடியுள்ளனர்.

அரி கொம்பன் யானையை நேரில் பார்த்த அந்த தொழிலாளர்கள் கழுத்தில் பெல்ட் கட்டியிருந்ததாகவும் யானையின் கண்கள் மிகவும் சிவப்பாக ஆக்ரோஷமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் தொழிலாளர்களை தாக்க விரட்டியதில் அவர்கள் அச்சமடைந்து ஓடிச் சென்று மரத்தில் ஏறி தப்பித்ததாகவும் தகவல் தெரிவித்தனர்.

முன்னதாக, கேரளப் பகுதியில் 20க்கம் மேற்பட்ட உயிர்பலி வாங்கிய அரிக்கொம்பன் யானை தமிழக வனப்பகுதியில் புகுந்து அங்குள்ள தொழிலாளர்களின் வீட்டை அடித்து நொறுக்கி தொல்லை கொடுத்து வருவது தேயிலை தோட்டத் தொழிலாளர்களிடம் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.