போலி சான்றிதழ் அளித்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு...

போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கி அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலி சான்றிதழ் அளித்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு...

ஈரோடு | கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி தென்காட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக ஜெயக்குமார் என்பவரது மனைவி ஏசுமரியாள் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 1996ம் ஆண்டு ஆசிரியர் பணிக்கு சேர்ந்த நிலையில் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி விட்டு கடந்த 15 ஆண்டுகளாக தென்காட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் படிக்க | இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அநியாயமானது....அரசியலமைப்பை அபகரித்த உச்சநீதிமன்றம்....

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஆசிரியர்கள் உண்மைத்தன்மை சான்று வழங்க அரசு உத்தரட்டது. அதைத்தொடர்ந்து ஏசுமரியாள் அவருடைய சான்றிதழ்களை சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

அங்கு அவருடைய ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை பரிசோதனை செய்ததில் அவை போலி்யான சான்றுகள் எனத்தெரிய வந்தது. மேலும் ஏசு மரியாள் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்த ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது. 

மேலும் படிக்க | போலி ஒத்திகை நடத்திய காவல்துறை...... இழிவுப்படுத்தப்பட்ட சமூகம்...நடந்தது என்ன?!!!

அதனடிப்படையில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பவானி வட்டார கல்வி அலுவலர் கேசவன் ஆகியோர் நடத்திய விசாரணையில் போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்தது உறுதியானதைத்தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர் இன்று போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த ஏசுமரியாள் மீது பவானி வட்டார கல்வி அலுவலர் கேசவன் அளித்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏசுமரியாள் கடந்த 1992ம் ஆண்டு ஆசிரியர் பட்டயத்தேர்வு முடித்த நிலையில், அதற்கான மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரூ.15 லட்சம் மதிப்பிலான போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல்...