உயர்நீதிமன்ற வாயிலில் தற்கொலை முயற்சி செய்த நபரால் பரபரப்பு...

உயர்நீதிமன்ற வாயிலில் தற்கொலை முயற்சி செய்த நபரால் பரபரப்பு...

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன், தான் இருக்கும் அதே பகுதியில், சலூன் நடத்தி வருகிறார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தனது தம்பி பாலகிருஷ்ணனின் மனைவி சுந்தரி என்பவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாகவும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சரிவர நடத்தாமல் பாதிக்கப்பட்ட தங்களிடம் விசாரணை நடத்தவில்லை என ஏற்கனவே முதலமைச்சர் தனிப்பிரிவில் இரண்டு முறை புகார் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு 39-ஆவது பலி - பாமக ராமதாசு வலியுறுத்தல்

ஆனாலும் இந்த வழக்குக் குறித்து எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதினால் தற்கொலை முயற்சி செய்ததாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. இதனிடையே இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றம் வந்த குணசேகரன் திடீரென மண்ணெண்ணெய்  தன் உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் குணசேகரன் மீது தண்ணீர் ஊற்றி காவல் நிலையம் அழைத்து சென்று மேற்கொண்டனர். சமீப காலங்களில் பலரும் அரசு அலுவலகங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள் அமுயற்சி செய்து வரும் நிலையில், அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில், முன்பை விட தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | அரசிலமைப்பை காப்போம் கையோடு கை கோர்ப்போம் - காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு